யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நண்பனின் வீட்டுக்கு வந்து கதிரையில் அமர்ந்தவர் திடீரென மயங்கி சரித்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த 34 வயதுடைய பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றதாகவும், அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக வீட்டார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.