யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு!

0
190

நாடு பூராவும் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் பாவனை தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்

பொலிஸ் மா அதிபரின் விசேட பணிப்புரைக்கமைய சிறுவர் மகளிர் துஸ்பிரயோகத்தடுப்புப் பணியகத்தினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள்பாவனை தொடர்பிலான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது

தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற மாணவர்களுக்கான போதைப்பொருள் பாவனை தொடர்பிலான விழிப்புணர்வு செயற்திட்டத்தில் சிறுவர் மகளிர் துஸ்பிரயோகத்தடுப்புப் பணியகத்தினரின்

உதவி பெண் பொலிஸ் அத்தியட்சகர்தீபானி மெனிகே,யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாண பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் யாழ் மாவட்டத்திற்குட்பட்ட 10 ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்,.