யாழ் ஆரியகுளம் முத்துமாரி அம்மன் ஆலய உண்டியல் உடைத்து திருடிய இருவர் கைது!

0
161

யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருடிய நாவற்குழி பகுதியை சேர்ந்த இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்ட நிலையில் ஆலய நிர்வாகத்தினரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த உண்டியலை உடைத்தோர் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.