யாழ். இளவாலையில் செயலிழந்த நிலையில் கைக்குண்டு மீட்பு!

0
254

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தான்குளம் பகுதியில் செயலிழந்த நிலையில் கைக்குண்டு ஒன்று, இன்று மீட்கப்பட்டுள்ளது.

சேந்தான்குளம் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்றை அவதானித்த பொதுமக்கள், இளவாலை பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த இளவாலை பொலிசார் செயலிழந்த நிலையில் காணப்பட்ட கைக்குண்டை குறித்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.