யாழ் – கொழும்பு தனியார் சொகுசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

0
224

யாழ்ப்பாணம்- கொழும்பு தனியார் சொகுசு பேருந்து நடத்துனர் நேற்று இரவு சாவகச்சேரி நகரில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

யாழ்- கொழும்பிற்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பேருந்தில் முற்பதிவு செய்தவர்களுக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏற்ற முற்பட்டபோது அவர்களுக்கும் பின்னால் வந்த யாழ். கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நடத்துனருக்கும் இடையில் முறுகல் தோன்றிய நிலையில் தனியார் சொகுசு பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.