அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் குடா நாட்டில் போதை பொருள் பாவணை அதிகரித்து வருவதோடு ஒவ்வொரு நாளும் போதை பொருட்களுடன் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மூன்று கடைகளில் பணிபுரிவோர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் நீண்ட காலமாக போதை மருந்து விற்பனையில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்
குறித்த கடைகளில் தொடர்ச்சியாக போதைப் பொருள் வியாபாரம் இடம் பெற்று வருவதாக அறியக்கூடியதாக உள்ளது
குறித்து மூன்று கடைகளையும் சீல் வைக்குமாறு ஏற்கனவே பல சமூகமட்ட பிரதிநிதிகளால் யாழ்ப்பாண மாநகர சபையினருக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும் அந்த மூன்று கடைகளுக்கும் சீல் வைப்பதற்கு யாழ்ப்பாண சபையின் முக்கிய புள்ளிகள் பின்னணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது யாழ்ப்பாண மாநகர சபையின் அசம்பந்தத்தனத்தினால் குறித்த கடைகளுக்கு சீல் வைக்க முடியாம ஏன் காரணமாக கொடுத்த போதைப்பொருள் வியாபாரம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டனர்
எனினும் அந்த மூன்று கடைகளின் உரிமையாளர் ஏற்கனவே பல்வேறு அமைப்புகளுடன் குறித்த கடையினை சீல் வைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில சகல அமைப்புகளும் போதைப் பொருளுடன் தொடர்புள்ள விடயங்களில் நாங்கள் தலையிட முடியாது அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் யாழ் மாநகர சபையின் இவ்வாறான சமூக பொறுப்பற்ற செயற்பாடு அனைவருக்கும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது,