யாழ் நகரில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிசாரினால் விசேட வேலை திட்டம்  முன்னெடுப்பு!

0
209

யாழ் நகரில் வாகன நெரிசலை குறைக்கும் முகமாக பொலிசாரினால் விசேட வேலை திட்டம்  முன்னெடுப்பு 

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ் நகரில்  பொருட்களை கொள்வனவு செய்யும் முகமாக பொதுமக்களின் நடமாட்டம் அதிக ளவில் காணப்படுவதோடு நகரப் பகுதியில் வாகனங்களினை நிறுத்துவதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமையினைகட்டுப்படுத்தும் முகமாக யாழ் மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிசார்  யாழ் மாநகர சபையுடன் இணைந்து யாழ்நகரில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பொருட் கொள்வனவிற்கு  வரும் பொதுமக்கள்  வாகனங்களை நகர அபிவிருத்தி  அதிகார சபையினால் வாகன தரிப்பித்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரம் வாகனங்களைநிறுத்த முடியும் என ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்படுகிறது

 போக்குவரத்து பொலிசார் நகர பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களினை வாகன நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.