யாழ் மாவட்ட மக்கள் தடுப்பூசியினை பெற்று கொள்வது அவசியமானது! நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி.

0
227

யாழ் மாவட்ட மக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வது அவசியம் என நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி அ. ஜெயக்குமாரன் தெரிவித்தார்

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  கொரோனா  தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் தொடர்பில்   கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

நல்லூர் சுகாதார அதிகாரி பணிமனையினை பொறுத்தவரை தடுப்பூசி வழங்கும் செயற்பாடானது  இன்று ஜே110 கிராம சேவகர் பிரிவிலும்  யாழ் பல்கலைக்கழகத்திலும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது 

எம்மைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொருவரும் இந்த கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமான ஒரு விடயமாகும் 
ஏனெனில் எங்களுக்கு கொரோனா தொற்று ஆபத்து ஏற்படும்போது இந்த தடுப்பூசி பெற்றுக் கொள்வதனால்  அதனுடைய  வைரஸினுடைய பாதிப்பு ஏற்படாது
 எனவே ஒவ்வொருவரும் இதனை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது அதிலும் பாலூட்டும் தாய்மாரும் இதற்கு தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் கர்ப்பமாக உள்ளவர்கள் மாத்திரமே தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியாது 
அத்துடன்  ஏற்கனவே முன்னைய காலங்களில்  ஏதாவது  தொடர்ச்சியான ஒவ்வாமை இருந்தால் மாத்திரமே அவர்கள் வைத்தியசாலைகளுக்கு சென்று தடுப்பூசிகளை கொள்வது மிகவும் சிறந்தது 

அவர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் தமக்குரிய தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் தம்மையும் எந்த சமூகத்தயும் பாதுகாத்து கொள்ள முடியும்

 யாழ் மாவட்ட்மக்கள் அனைவரும் இதனைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்ததாகும் உண்மையில் 30 வயதிற்கு உட்பட்டவர்களும் தடுப்பூசியினை பெற முடியும் ஆனால் அரசாங்கத்தின் திட்டத்தின்படி 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே தற்போது வழங்கப்படுகிறது

  18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் இந்த  தடுப்பூசியினை போட்டுக் கொள்ள முடியும் எனினும் அரசாங்கத்தின்  தற்போதைய திட்டத்தில்  30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்கப்படுகின்றது 

எனவே அனைவரும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன்  மூலம்  கொரோனா தொற்றால் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்தார்