யாழ் ராணி புகையிரதத்துடன் மோதி இளம் குடும்பத்தர் பலி!

0
160

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்திலிருந்து யாழ் நோக்கி பயணித்த யாழ் ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான டிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் குறித்த சடலம் புகையிரத நிலைய அதிகாரிகளால் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.