யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலியில் வீதியைக் கடக்க முற்பட்ட இளைஞன் மீது ஹயஸ் ரக வாகனம் மோதி நேற்றிரவு விபத்து இடம்பெற்றது.
சம்பவத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.