யு.எஸ்.எப் சிறிலங்கா அமைப்பின் வருடாந்த இப்தார், செயற்பாட்டாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

0
149

யு.எஸ்.எப் சிறிலங்கா அமைப்பின் வருடாந்த இப்தார் மற்றும் செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் கபூர் ஏ அன்வரின் தலைமையில் சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது
நிகழ்வில் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,
ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்