யாழ்ப்பாணம் ராஜகிராமம், குருநகர், திருநகர் பகுதிகளில் அமுலில் இருந்த முடக்கல் நிலை நாளை காலையில் இருந்து நீக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ .கேகேஸ்வரன் தெரிவித்தார்
அண்மையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ராஜகிராமம், யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குருநகர் , திருநகர் ஆகிய மூன்று கிராமத்தை சேர்ந்தவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்ததன் காரணமாக கொரொனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் குறித்த தொற்றுக்கு உள்ளானவர்கள் அப் பகுதியில் நடமாடியதன் அடிப்படையில் அக்கிராமத்திலிருந்து யாரும் வெளியே செல்லாதவாறும் அப்பகுதிக்குள் புதிதாக எவரும் உள் நுழையாத வாறும் சுகாதார பிரிவினரால் முடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் படி எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் நாளை காலையிலிருந்து குறித்த மூன்று கிராமங்களும் முடக்க நிலையிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார்.