வட மாகாணத்தை முன்னேற்ற தற்போதைய மாணவ சமூகம் பங்களிக்க வேண்டும்! மாகாண பிரதம செயலர் தெரிவிப்பு.

0
167

வட மாகாணத்தினை முன்னேற்றுவதற்கு பங்களிப்பினை வழங்குங்கள்! என வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

அண்மையில் வெளியாகிய கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மூன்று பாடங்களையும் ஏ சித்தி பெற்ற யாழ்  வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார் இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் கல்வி கற்று  உயர் பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் கட்டாயமாக நீங்கள் வடக்கு மாகாணத்திலே கடமையாற்ற வேண்டும் உங்களுடைய மாகாணத்தை முன்னேற்றுவதற்கு உங்களால் ஆன பங்களிப்பினை செய்ய வேண்டும்

 குறிப்பாக நான் இன்று வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடமை ஆற்றுகின்றேன் நான் ஏன்  தென்பகுதியில் இருந்து இங்கு வரவேண்டும் இங்கே அந்த பதவிக்கு   உங்களது மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம் தானே  எனவே நீங்கள் உங்கள் சொந்த மாகாணத்திற்கு உங்களால் ஆன பங்களிப்பினை செய்ய வேண்டும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள வறிய மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கு நீங்கள் கட்டாயமாக உங்களால் பங்களிப்பினை வழங்க வேண்டும்

 அதேபோல பரீட்சை பெறுபேற்றின்  அடிப்படையில்  இம்முறை மூன்றாவது இடத்திற்கு முன்னுக்கு வந்து விட்டோம் அதேபோல  இன்னும் முன்னுக்கு வருவதற்கு எதிர்காலத்தில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கு  சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆகிய நீங்கள்  ஊக்கம் அளித்து அவர்களுக்கு எவ்வாறான வேலை திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அவர்கள்  பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியும் என ஒரு வேலை திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்

  மீண்டும் ஒரு கோரிக்கையை உங்களிடம் முன் வைக்க விரும்புகிறேன் அதாவது வடக்கு மாகாணத்தை சேர்ந்த நீங்கள்  உயர்  பட்டங்களைப் பெற்றாலும்  மீண்டும் கடைசி மூன்று வருடங்கள் ஆவது வடக்கு மாகாணத்திற்கு சேவையாற்ற வேண்டும் இது எனது தாழ்மையான வேண்டுகோள் 

ஏனென்றால் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன குறிப்பாக சாவகச்சேரி வைத்தியசாலை அதே போல பல்வேறு துறைகளில் பல்வேறுவெற்றிடங்கள் காணப்படுகின்றன அந்த வெற்றிடத்தினைநிரப்புவதற்கு  வடக்கு மாகாணத்தை சேர்ந்த  உங்களின் பங்களிப்பினை வழங்க வேண்டும் 

அதேபோல வட மாகாணம் என குறிப்பிட்டுவிட்டு யாழ்ப்பாண நல்லூர் பகுதியில் கடமையாற்றுவதை ஏற்க முடியாது

 அது  நகரப் பகுதி ஆனால் தீவு பகுதிகளில் ,பின்தங்கிய பகுதிகளில்  கடமையாற்றுவதன் மூலம் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை கல்வி மட்டத்தினை உயர்த்துவதற்கு உங்களால்ஆன பங்களிப்பினை செய்ய முடியும் என உங்களிடம் கோரிக்கை விடுகின்றேன்

 ஏனென்றால் நீங்கள்  மாணவர்கள் அல்ல நீங்கள் வயது வந்தவர்கள் எனவே எதிர்கால சமுதாயம் தொடர்பில் சிந்தித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக்கூடியவர்கள் எனவே நாளைய தலைவர்கள் என்ற ரீதியில் உங்களுடன்  இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்றார்,