பாதுகாப்புத் தரப்பின் கீழுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் விடுவிக்கப்பட வேண்டிய தனியார் காணிகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்
இன்று இடம்பெற்றது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், ஜனாதிபதியின் செயலாளர், காணி அமைச்சின் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்திருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆயர் இல்லக் காணி, விவசாய காணிகள் தொடர்பிலும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
அத்தோடு பாலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக சுவீகரிப்புச் செய்யப்பட்ட காணிகள் தொடர்பிலும் ஜனாதிபதி தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில், பிறிதொரு கலந்துரையாடலை நடாத்திய பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரவித்துள்ளார்.