வடக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பற்றிக் டிரஞ்சன், எதிர்வரும் பத்தாம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.