கரிடாஸ் எகெட் நிறுவனத்துடன் இணைந்து கிராம மட்டத்தில் செயல்பட்டு வரும் இளையோர் சமாதான குழுவின் இளைஞர் யுவதிகளுக்கான ‘வன்முறை தீவிரவாதத்தை தணிப்போம் ‘ ஒரு நாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
கரிடாஸ் எகெட் நிறுவனம் இணைந்து இயக்குனர்அருட்பணிஎ .யேசுதாசன் அடிகளார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கிராம மட்டத்தில் செயல்பட்டு வரும ;இளையோர் சமாதான குழுவில் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு அடிப்படை வாதம் ,தீவிரவாதம் ,இனவாதம் , பிரதேச வாதம் பயங்கரவாதம் போன்ற வன்முறை தீவிரவாதத்தை தனிப்பதற்குரிய வழிகாட்டல் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது
கரிடாஸ் எகெட் நிறுவனத்தின் சமாதான செயற்திட்ட இணைப்பாளர் ஐ கிறிஸ்டி ஒழுங்கமைப்பில் நடைபெற்ற பயிற்சி செயலமர்வில் தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி பெனிக்னஸ் கலந்து கொண்டார்