2024 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ளது.
கடந்த 13ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடுத்த வருடத்திற்கான பாதீடு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், 14ஆம் திகதி முதல் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.
இறுதி நாளான இன்றும் முற்பகல் முதல் விவாதம் இடம்பெற்று மாலை 6 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாளைய தினம் முதல் 19 தினங்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளதுடன், பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.