Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தொழில் வல்லுநர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டிற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் முதல் மதிப்பாய்வை நடத்துவதற்காக, செப்டெம்பர் 15 ஆம் திகதி IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாகவே அரசாங்கத்திற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மார்ச் மாதம் வழங்கிய எழுத்துமூல உறுதிமொழிக்கு அமைய ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பேச்சாளரான சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்தே இளங்கசிங்க, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரிவிதிப்பு முறைமையில் திருத்தம் செய்யப்படும் என ஜனாதிபதி விக்கிரமசிங்க உறுதியளித்திருந்த போதிலும் அது நடைபெறவில்லை என தெரிவித்தார்.வரிப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறும் பட்சத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.