வவுனியா மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு

0
87

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பிற்காக வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துசெல்லும் பணி இன்று காலை 7 மணிமுதல் இடம்பெற்றுவருகிறது.
வவுனியா மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்படவுள்ள சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களிற்கு பொலிசாரின் பாதுகாப்புடன் பேருந்துகளில் எடுத்துச்செல்லப்பட்டன.
வவுனியாவில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 585 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக பொலிசார் உட்பட 2500 ற்கும் மேற்ப்பட்ட அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.