வவுனியாவில் இன்று நால்வருக்கு கொரோனா

0
197

வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு இன்று மதியம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிச்சூர் மற்றும் நகர வர்த்தக நிலையப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் கடந்த சனிக்கிழமை மில் வீதியில் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இருவருக்கும் என நான்கு பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த ஒரு வாரத்தில் 128 பேர் வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா நகரம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் இன்று முதல் முழுமையாக முடக்கப்பட்டதுடன் வவுனியா நகரக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.