வவுனியா, ரயில் நிலையம் முன்பாக நின்ற பழைமையான மரம் முறிந்து விழுந்ததில் அரச விடுதி மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றும் சேதமடைந்தது.
இன்று மதியம் இச் சம்பவம் இடம்பெற்றது.வவுனியாவில் மீண்டும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதுடன், காற்றும் வீசி வருகின்றது.
இன்று மதியம் வீசிய காற்று காரணமாக வவுனியா ரயில் நிலையம் முன்பாக நின்ற பழைமையான மரம் முறிந்து விழுந்தது. இது மற்றுமொரு மரக் கிளை மீது முறிந்து விழுந்ததால் அந்த மரமும் முறிந்து விழுந்தது.
இதனால், அருகிலிருந்த அரச விடுதியின் கூரைப் பகுதி சேதமடைந்ததுடன், வர்த்தக நிலையம் ஒன்றின் கூரை மற்றும் சுவர் பகுதி என்பன உடைந்து சேதமடைந்தன. அத்துடன் மின்சார வயர்கள் அறுந்தும், இணைப்புகள் சேதமடைந்ததாலும் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.