வாழைச்சேனையில் மக்கள் நடமாட்டம்

0
514

நாட்டில் தற்போது பயனத்தடை அமுலில் உள்ள நிலையில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பகுதிகளில் வாத்தக நிலையங்கள் பூட்டப்பட்டு காணப்பட்டதுடன் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

அரச அலுவலகங்கள் இயங்காமல் உள்ளதுடன் அரச,தனியார், வங்கிகள் தமது வாடிக்கையாளர் சேவையை இன்று வழங்கின.

இதேவேளை ஓட்டமாவடி மக்கள் வங்கியில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வங்கியின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அதன் சேவைகளை வாழைச்சேனை மக்கள் வங்கி முன்னெடுத்து வருகிறது.

ஓட்டமாவடி பிரதான வீதியில் வாகன போக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டதால் வாழைச்சேனை பொலிஸார் பயணத்தடை போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியதுடன் பயணத்தடை தொடர்பான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.