விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை பிரிட்டன் தொடரவேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கை விடுதலைப்புலிகளை தோற்கடித்து அந்த அமைப்பின் ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் உலகில் மிகவும் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டுள்ளனர் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர்களால் எந்த நாட்டினதும் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரிட்டன் தொடரும் என எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.