விமானப்படைக்குச் சொந்தமான விமானம் அவசரமாக தரையிறங்கியது

0
167

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானமொன்று, திருகோணமலை நிலாவெளி கடற்கரைக்கு வடக்கே உள்ள ஈராகண்டி பகுதியில் அவரசமாக தரையிறங்கியுள்ளது.

செஸ்னா 150 என்ற விமானமே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்கியுள்ளதாக, விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானம் இன்று (07) காலை 10:22க்கு சீனா வளைகுடாவில் இருந்து புறப்பட்டு காலை 10:48க்கு அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது.

விமானத்தில் விமானிகள் இருவர் இருந்துள்ளனர் என்றும் இவர்கள் எவ்விதக் காயமுமின்றி உயிர்தப்பியுள்ளனர் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷனா பதிரண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.