வியாபார நிலையத்தின் மீது லொறி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

0
104

கொழும்பு – சிலாபம் வீதி, நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் லொறியொன்று வியாபார நிலையம் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில், வியாபார நிலையத்திலிருந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெரியமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 56 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த லொறி, இடதுபுறமாக இருந்த வியாபார நிலையத்தின் மீது மோதி வியாபார நிலையத்துக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி என்பவற்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியிலிருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லொறி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.