வவுனியா நகரில் உள்ள ஒரு விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து நேற்று (11) ஆண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அதே விற்பனை நிலையத்தில் ஊழியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரவு வீட்டிற்குச் செல்ல முடியாத காரணத்தால் குறித்த நபர், விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் தங்கியிருப்பதாகவும், மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.உயிரிழந்தவர் வவுனியா சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.