வீடு தீக்கிரை: சுமார் 15 இலடசம் ரூபாய் பெறுமதியான சொதுக்களுக்கு சேதம்

0
93

களுத்துறை அளுத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீனவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பாரியளவிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அளுத்கம பொலிஸார் மற்றும் களுத்துறை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் குறித்த வீட்டை வாடகைக்கு வழங்கியுள்ளார் என்றும் வாடகைக்கு விடப்பட்ட வீட்டில் ஆடையகம் நடத்தி செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் ஆடையகத்தில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான துணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரியவருகின்றது.

தீ விபத்தினால் உயிர்ச்சேதம் ஏற்படாத போதிலும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.