வீடுகளை உடைத்து யானைகள் அட்டகாசம்! மயிரிழையில் உயிர் தப்பிய அறுவர்!!

0
21

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கோமாரி மற்றும் செல்வபுரம் பகுதிகளில் நள்ளிரவில் காட்டு யானைகள் பெரும் அட்டகாசம்
செய்துள்ளன.

கோமாரிப் பகுதியில் ச. திலகராசா என்பவரின் வீட்டை உடைத்து அங்கிருந்த நெல்லை உண்டு சேதப்படுத்தியுள்ளது.

அது மாத்திரமல்லாது அங்கு சமையலறையில் இருந்த பால்மா மற்றும் பல உணவுப் பண்டங்களையும் உண்டு சேதப்படுத்தியது.
அந்த வீட்டின் பல பகுதிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

அப்போது, வீட்டுக்குள் இருந்த மூன்று பெண் பிள்ளைகளும் தாயும் தந்தையும் பின்னாலுள்ள ஜன்னல் வழியாக பாய்ந்து மயிரிழையில் தப்பியோடி உயிர்தப்பினர்.

இதேவேளை, செல்வபுரத்தில் மூன்று வீடுகளையும் மதில்களையும் காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் கடந்த இருமாதங்களாக காட்டு யானைகளின் தாக்குதல் சம்பவங்கள் கூடுதலாக இடம்பெற்று வருகின்றன. அத்தோடு, இருவர் கொல்லப்பட்டனர் .

ஆனால், காட்டு யானைகளின் தாக்குதல்களைத் தடுக்க இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.