வீதியில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாது வீதியில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன், பி.சி.ஆர் பரிசோதனை

0
275

கல்முனை வடக்கு சுகாதாரப்பணிமனைக்கு உட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாது வீதியில் நடமாடியவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எழுமாற்றாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று(19) பாண்டிருப்பு பிரதான வீதியில் 77 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும், 20 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்ட்டன. இவற்றில் எவருக்கும் தொற்று இல்லையென கண்டறியப்பட்டதாக கல்முனை வடக்கு சுகாதாரப் பணிமனை தெரிவத்தது.

இதேவேளை, கல்முனை நகரில் மேற்கொள்ளப்பட்ட 60பேருக்கான பரிசோதனைகளின் போது ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரப்பரிவினர் தெரிவித்தனர்.

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கல்முனை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டனர்.