அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் சிற்றூழியர்கள் இணைந்து வைத்தியசாலையின் முன்றலில் ஒன்று கூடி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று காலை முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
மேற்குறித்த எமது கோர்ககை யாவும் பரிசீலனை செய்ய வேண்டும் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் உப தலைவர் ரி.எம் நஸ்ருதீன் தெரிவித்தார்.
இதே வேளை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.