ஹந்தானை மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இன்று வியாழக்கிழமை (05) காலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மற்றும் கிரிபத்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 16 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் குழுவொன்று நேற்று புதன்கிழமை (04) காலை பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சரசவிகம பிரதேசத்தில் இருந்து ஹந்தானை மலைக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர்.
இதன்போது மலையில் ஏறிக்கொண்டிருந்த மாணவர்கள் குழுவொன்று கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் காரணமாக வழி தவறி காணாமல் போயுள்ளனர்.
பின்னர் காணாமல் போன மாணவர்கள் குழு இது தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த மாணவர்கைளை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.