மேல் மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது.
இதில், ஆறு பொலிஸார் குணமடைந்த நிலையில் மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில், 250 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 317 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1,447 அதிகாரிகள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில், 23 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்ததுடன், 1,424 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.