அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களை கண்டறிய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கிரிபத்கொட, களனி, மாகொல மற்றும் பட்டிய சந்தி ஆகிய பகுதிகளில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தகர்கள் 50 முதல் 60 ரூபா வரையில் முட்டையை விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.