ஜோஹன் பீரிஸ் என்ற இலங்கை பிரஜை ஒருவர் அந்தாட்டிக்காவில் உள்ள மிகவும் உயரமான மலையான வின்சன் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த 27 ஆம் திகதி வின்சன் மலையில் ஏறி இந்த சாதனையை படைத்துள்ளார்.
வின்சன் மலையில் ஏறிய முதல் இலங்கை பிரஜையும் இவர் ஆவார். அந்தாட்டிக்காவில் உள்ள வின்சன் மலையானது 4,892 மீற்றர் உயரமுடையது ஆகும்.
இவர் 2018ஆம் ஆண்டில் உலகின் மிக உயரமான மலைத் தொடரான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கை பிரஜை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஜோஹன் பீரிஸ் அவுஸ்திரேலியாவின் கொஸ்கியஸ்கோ மலை, ஆபிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவின் எல்ப்ரஸ் சிகரம் மற்றும் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட மலைகளைில் ஏறி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.