அனுராதபுரம் விஜேபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை, கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த, 42 வயதான நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர், நேற்று இரவு, தனது நண்பர்களுடன் இணைந்து, தனது வீட்டில் களியாட்ட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தார்.
இதன் போது, உயிரிந்த நபருக்கும், அவரது நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக, இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து, 28 வயதான நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.