அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று வேதனம்!

0
139

அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழமை போன்று இன்று ஜனவரி மாத வேதனம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச தொழிலில் உள்ள நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் இன்று வேதனம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கான வேதனத்தில் தாமதம் ஏற்படலாம் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அமைச்சர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.