தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தலின், 11ஆம் நாள் இன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.





