அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை, மகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிப் குமார் படேல், 56, ஆறு ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
வர்ஜீனியா மாகாணத்தின் அக்கோமாக் கவுன்டி என்ற நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், பிரதிப் குமார், அவரது மகள் ஊர்மி, 24, பணிபுரிந்து வந்தனர். கடந்த 20ம் திகதி அதிகாலை 5:30 மணிக்கு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அங்கு வேலை செய்து கொண்டிருந்த பிரதிப் குமார், ஊர்மி ஆகியோரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில், சம்பவ இடத்திலேயே பிரதிப் குமார் உயிரிழந்தார். படுகாயமடைந்த ஊர்மி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஓனான்காக் நகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ப்ரேஷியர் டெவோன் வார்டன், 44, என்பவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.