28 C
Colombo
Saturday, July 13, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அமெரிக்காவுடன் நாளை மோதல்: ‘ஹெட்ரிக்’ வெற்றியை பெறுமா இந்தியா?

T 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி A பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ஓட்டங்களால் வென்றது.

இந்திய அணி 3-வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை நாளை (12ஆம் திகதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி நியூயோர்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி ஹெட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் போட்டியில் பெட்டிங் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்ட் ஒருவரே தாக்கு பிடித்து விளையாடினர் . அபாரமான பந்துவீச்சால் வெற்றி கிடைத்தது. கிட்டத்தட்ட தோற்க வேண்டிய ஆட்டத்தில் வெற்றி அமைந்தது. அமெரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்ததால் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராட் கோலி 2 ஆட்டத்திலும் தொடக்க வரிசையில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ரோகித் சர்மாவுடன், ஜெய்ஷ்வால் தொடக்க வீரராக விளையாடலாம் . கோலி மிடில் வரிசையில் களம் இறங்கலாம். ஷிவம் துபே கழற்றி விடப்படலாம்.

சூர்ய குமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 2 ஆட்டத்திலும் வெற்றியை பெற்றதால் மாற்றம் செய்ய அணி நிர்வாகம் விரும்பாது. பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா , அக் ஷர் படேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.இதனால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

இந்தியாவை போலவே மோனக் படேல் தலைமையிலான அமெரிக்க அணியும் முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று உள்ளது. கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை சூப்பர் ஓவரிலும் வீழ்த்தி இருந்தது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து அமெரிக்கா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஹெட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி உள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles