அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். இந்நிலையில் தேர்தல் நிலவரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். தேர்தலில் மகத்தான ஆதரவு அளித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜார்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆனால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் செய்கின்றனர்.
இந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இழுபறியில் உள்ள இந்த மாநிலங்களில் முடிவுகள் வெளியாகவில்லை. ஆனால் தபால் வாக்குகளை எண்ண ஆரம்பித்தால் டிரம்ப் பின்னடைவை சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.