அமெரிக்க தேர்தலில் புதிய மாற்றம் – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

0
41

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து இன்றுவரை பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அந்தவகையில், தற்போது அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். 

அதன்படி, வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும். தேர்தல் நாளுக்குள் வாக்குச்சீட்டுகளை அனைவரும் பெறுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட அமெரிக்க தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அதேபோல், ‘கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு கடவுச்சீட்டு போன்ற குடியுரிமை சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சமூகப் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் வெளியுறவுத்துறை உள்ளிட்ட கூட்டாட்சி நிறுவனங்களை பணியில் உள்ளவர்களில் குடியுரிமை சான்றிதழ் அல்லாதவர்களை அடையாளம் காண உதவும் தரவுகளை தேர்தல் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையெழுத்திட்ட பிறகு வரும் வாரங்களில் தேர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்தார்.