அம்பாறையில் பேருந்துகள் மோதி கோர விபத்து: பாடசாலை மாணவர்கள் பலர் காயம்

0
110

அம்பாறை-அக்கரைப்பற்று பிரதான வீதியில், கல் ஓயா பாலத்திறகு அருகே, இன்று பிற்பகல், இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்,
23பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்தும் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில், அவர்க்ள அம்பாறை பொது வைத்தியசாலையில், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் பெருமளவானவர்கள் பாடசாலை மாணவர்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.