அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இராணுவத்தினர் உதவி

0
28

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு. அக்கரைப்பற்ற இராணுவ முகாமின் 241வது படைப்பிரிவினர், உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர்.

இன்றைய தினம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அலிக்கம்பை மற்றும் ஆலையடிவேம்பு போன்ற பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உலருணவுகள் வழங்கப்பட்டன.

241ஆம் படைப்பரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டானிக பத்திரரெட்ணவின் முயற்சியின் பயனாக, மேஜர் ஜானக சுபசிங்கவின் ஒருங்கிணைப்பில்
இடம்பெற்ற உலர் உணவுகள் வழங்கும் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்துகொண்டிருந்தார்.