2022 மற்றும் 2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்து, மிகை அறுவடையினை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் அம்பாறை கல்முனையில் ஆரம்பமாகியுள்ளது.
கல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அரிசி ஆலைகளில் நெல் கொள்வனவுகளை மேற்கொள்ளும் செயற்திட்டம் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பெரியநீலாவனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ டக்ளஸ் கலந்து கொண்டார்.