அம்பாறை கல்முனை பிரதேச செயலக பதில் நிர்வாக உத்தியோகத்தருக்கான பாராட்டு விழா

0
133

திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவையில் அதியுயர் தரத்தில் சித்தியடைந்த அம்பாறை கல்முனை பிரதேச செயலகபதில் நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சானுக்கான பாராட்டு விழா பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில்
பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாராட்டு விழாவில் கணக்காளர் யூ.எல் ஜவாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,
நிர்வாக கிராம உத்தியோகத்தர், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர், காணி உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.