அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், ‘சுயமாக முன்னேறும் மனிதர்கள்’ எனும் தொனிப் பொருளில்
பிரதேச செயலகத்தில் விற்பனைக் கண்காட்சி இன்று நடைபெற்றது.
சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.றமீஸ் தலைமையில் விற்பனைக் கண்காட்சி நடைபெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜீவராஜ் நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்ச்சியாளர்களின் உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
நிகழ்வில் நிதி உதவியாளர் கிருபானந்தன். மகளீர் அபிவிருத்தி உதவியாளர் திருமதி றமீஸா, திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவனேசன் என பலரும் கலந்து கொண்டனர்.