அம்பாறை சம்மாந்துறையில் கால்நடைகளின் தொல்லை அதிகரிப்பு

0
60

அம்பாறை சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரிக்கு அருகே நேற்றிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில், வீதியில் சுற்றித்திரிந்த இரண்டு கட்டாக்காலி மாடுகள் உயிரிழந்துள்ளன.

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பிரதான வீதிகளில், கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
திண்மக்கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையால், அவற்றை உண்பதற்காக கட்டாக்காலி கால்நடைகள்
வீதிகளில் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்துச் சம்பவங்கள் அப் பகுதியில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.