அம்பாறை சாய்ந்தமருதில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கலந்துரையாடல்

0
111

அம்பாறை சாய்ந்தமருதில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் நடைபெற்றது.

கலந்துரையாடலானது கலாநிதி ஏ.எல்.அன்சார் தலைமையில் நடைபெற்றதுடன் அதிதிகளாக இந்தியாவின் முன்னாள் மாநில சட்ட சபை உறுப்பினர் கே.ஏ.எம் முஹம்மட் அபூபக்கர் மற்றும் தமிழ்நாடு சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.சாஹூல் ஹமீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக ஆராயப்பட்டது. அதிதிகள் உள்ளிட்ட ஏனைய அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.