வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தடயந்தலாவ பிரதேச வேளாண்மை செய்கையை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம
நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ள நிலைமையினால், தடயந்தலாவ நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் சுமார் 2ஆயிரத்து 800 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டிருந்த வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டது.
வெள்ளப் பெருக்கு காரணமாக வீதிகள் மற்றும் வயல் நிலங்களும் கடுமையான சேதங்களுக்குள்ளாகின. இந் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட அரசாங்க அதிபர், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு விவசாயிகளின் பிரச்சினைக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.