சுகாதார அமைச்சினால் 06 தொடக்கம் 09 மாத குழந்தைகளுக்கு, மேலதிகமான சினனமுத்து தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் ஊடாக அம்பாறை
திருக்கோவில் பிரதேசத்தில் 89 குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தனின்
கண்காணிப்பின் கீழ், தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது.
இவ் சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் பிரதேச பொது சுகாதார தாதிய உத்தியோகத்தர், பிரதேச மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள்,
குடும்ப நல மருத்துவ மாது உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்;டனர்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 89 குழந்தைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி ஏற்றப்பட்டது.